காஞ்சிபுரம்: வைகுண்ட பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் பழமையான வைகுந்த வல்லி உடனுறை வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை சேஷ வாகனத்தில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். இதைத் தொடர்ந்து சந்திர பிரபை நடந்தது.ஐந்தாம் திருநாளான நேற்று, வைகுண்ட பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 7:00 மணிக்கு யாளி வாகன உற்சவம் நடந்தது.