பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
10:06
சென்னை: யோகி ராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தின் சார்பில், ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவும், மகா கும்பாபிஷேகமும், திருவண்ணாமலையில், இம்மாதம், 18, 19 தேதிகளில் நடக்கிறது. இம்மாதம், 16ம் தேதி காலை, 6:30 மணிக்கு ஹோமம் நடக்கிறது. 10:45 மணி முதல், 12:45 மணி வரை பகவானுபவங்கள் பகிர்தல்; மாலை, 4:00 மணி முதல், 5:30 மணி வரை, தேவார இசைப்பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. திருவாசக செந்நாவலர், மயிலை ஸ்ரீ.பா.சற்குருநாதன் ஓதுவார் மற்றும் அவருடைய குழுவினர், தேவார நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மாலை, 5:45 மணி முதல், 7:45 மணி வரை, சாரதா ஸ்ரீகரன் குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது. அடுத்த நாள், 19ம் தேதி காலை, 7:00 மணிக்கு, மகாபிஷேகம் நடக்கிறது. காலை, 11:15 முதல் 12:45 மணி வரை, பக்தர்கள் பஜனை நடக்கிறது. மாலை, 4:15 மணி முதல், 5:45 மணி வரை, ஆஸ்ரம பக்தர்கள் பஜனையும், மாலை, 6:00 மணி முதல் 7:45 மணி வரை, சவிதா ஸ்ரீராம் குழுவினரின், அபங்கம் மற்றும் பஜனை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, பகவானின் வெள்ளி ரத ஊர்வலம் நடக்கிறது.