வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு இளநீர், தேன், பால், திருமஞ்சனம், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேக பூஜை நடைபெற்றது. சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து காசிவிஸ்வநாதர் தேவியருடன் பசுவாகனத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஷேக்கல்முடி சிவபெருமான் கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில், வாழைத்தோட்டம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.