பதிவு செய்த நாள்
13
ஜூன்
2013
10:06
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த நெடுசாலை வேடியப்பஸ்வாமி கோவிலின் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. கடந்த 10ம் தேதி காங்கா பூஜை, கணபதி பூஜை நடந்தது. 11ம் தேதி அங்குரார்பணம், சர்வசாந்தி பூஜை, சர்வ ஹோமங்கள், சர்வ பூஜைகள், சாமி அஷ்டபந்தன பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை, 9 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் நெடுசாலை, கிருஷ்ணகிரி, சின்னக்கொத்தூர், நல்லூர், பெரியகொத்தூர், எட்ரப்பள்ளி, ஆவல்நத்தம், பந்தலூர், தின்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 18ம் தேதி வரை மஹாபாரத நாடகங்களும், இன்னிசை கச்சேரிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராஜேந்திரவர்மா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.