மதுராந்தகம்: மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில், கருட சேவை உற்சவம், நேற்று நடந்தது. மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் என, அழைக்கப்படும் கோதண்டராமர் கோவில் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாம் நாளான நேற்று, கருடசேவை உற்சவம் நடைபெற்றது. காலை 5:30 மணியளவில் கோதண்டராமர் கருட வாகனத்தில் எழுந்தருளி, மதுராந்தகம் நகரில் உள்ள ஆஸ்பிட்டல் ரோடு, தேரடி தெரு, வன்னியர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக, வீதி உலா சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 7:00 மணிக்கு உற்சவ பெருமாள் அனுமந்த வாகனத்தில் வீதியுலா சென்றார்.