பதிவு செய்த நாள்
24
ஜூன்
2013
10:06
சேலம்: காளிப்பட்டி சென்றாய பெருமாள், ஆஞ்சநேயர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, புண்யாஷம், வாஸ்து சாந்தி, தீர்த்த குடம் ஊர்வலம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணாஹூதி, அஷ்டபந்தனம், விமானம் கண் திறத்தல், முதல், இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. பெருமாளுக்கு, அஷ்டபந்தன யந்திர ஸ்தாபன மருந்து சாற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடந்தது. மூலம் விமானம், சகல கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கும், புனித நீர் ஊற்றி, சங்ககிரி சென்ன கேசவ பெருமாள் கோவில் அர்ச்சகர் சீனிவாச பட்டாச்சாரியார், கல்யாணம் ஆகியோர், கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில், மஹேந்திரா கல்வி நிறுவனங்களின் தலைவர் பாரத்குமார், செயலாளர் வள்ளியம்மாள், மேலாண்மை இயக்குனர் மஹா அஜய் பிரசாத், வக்கீல் சதாசிவம், பேரூராட்சி தலைவர் திருமலை, செயல் அலுவலர் கோவிந்தராஜீ உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை, கோவில் தர்மகர்த்தா ரங்கசாமி, செயல் அலுவலர் முத்துசாமி ஆகியார் முன்னின்று நடத்தினர்.