பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
10:06
மேல்பொதட்டூர்பேட்டை: பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவிலில், சிறப்பு யாகம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பள்ளிப்பட்டு அடுத்த, மேல்பொதட்டூர் கிராமத்தில், பூவராக சுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், பவுர்ணமி தினத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு சிறப்பு சுதர்சன ஹோமம், கணபதி ஹோமம், லட்சுமி பூஜை ஆகியவை நடந்தன. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவி, பூவராக சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து, கிராமத்து பெண்கள் பங்கேற்ற, 108 திருவிளக்குபூஜை நடந்தது. அடுத்ததாக உற்சவர் கோவில் வளாகத்தை சுற்றி வந்து திருவீதியுலா நடந்தது. முன்னதாக, 5:00 மணிக்கு பூவராக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா வடிவேல் மற்றும் குருக்கள் ரகுபதி சர்மா ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல், பெருமாநல்லூர் ஓசுரம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு, 7:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் செய்வித்து, வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 8:00 மணியளவில் கோவில் மண்டபத்தில், யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடந்தன.