திருச்செந்தூர் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2013 10:06
திருச்செந்தூர்: திருச்செந்தூர் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவிலில் வருஷாபஷேக விழா நடந்தது.திருச்செந்தூர் ரயிலடி ஸ்ரீ ஆனந்த விநாயகர் கோவிலில் வருஷாபஷேக விழாவை முன்னிட்டு கோவில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு கணபதி ஹோமம், லட்சார்ச்சனை பூஜை, 8.45 மணிக்கு நவக்கிரஹ கும்ப பூஜை, 108 சங்கு புஜை நடந்தது. காலை 10.45 மணிக்கு விமான அபிஷேகம், தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபஷேகம், அலங்காரம், தீபாராதனையாகி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரசன்ன பூஜையும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. விழாவில் திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், உடன்குடி வேளாண் உதவி இயக்குநர் பாரதி, தொடக்க வேளாண்மை வங்கித்தலைவர் விஜயராகவன், ரயில்வே முன்னாள் ஊழியர் வண்ணமுத்து பாரத உழவாரப்பணிக்குழுத்தலைவர் அகிலன் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரயில்வே நிலைய மேலாளர் கிருஷ்ணன், நிலைய அலுவலர் ஜெயக்குமார் ஊழியர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.