பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
10:06
சிவகிரி: வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா தெப்பத் உற்சவம் நடந்தது. இக்கோயிலில் ஆனித்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடந்தது. விழா நாட்களில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை, வீதிஉலா நடந்தது. கடந்த 22ம் தேதி 9ம்திருவிழாவன்று தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் நிறைவுநாளான நேற்று முன்தினம் 10ம் திருவிழா மண்டகப்படிதாரரான இல்லத்துபிள்ளைமார் சமுதாயம் சார்பில் 68வது ஆண்டு சப்தாவர்ணம் திருவிழா நடந்தது. காலை 9 மணிக்கு தீர்த்தவாரி கனகபல்லக்கில் அம்மையப்பன் திருவீதிஉலா, மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் திருவீதிஉலா நடந்தது. தெப்பத்திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதியதாக தெப்பம் அமைக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு தெப்பத்திருவிழாவான நேற்று முன்தினம் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், பெரிய தீபாராதனை நடந்தது. தெப்பத்தேர் நீராளிமண்டபத்தை 11 முறை வலம் வந்தது. தெப்பத்திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின் முறை சமுதாயம் சார்பில் வாசுதேவநல்லூர் நகரப் பஞ்சாயத்திற்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள அனைத்து சமுதாய தலைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பஞ்., தலைவர் ஆறுமுகம், துணைத்தலைவர் சுடலைமுத்து, நாடார் உறவின்முறை தலைவர் சமுத்திரம்நாடார், துணைத்தலைவர் தங்கப்பழம்நாடார், இல்லத்துபிள்ளைமார் சமுதாயத் தலைவர் மாரியப்பப்பிள்ளை, ஓய்வு பெற்ற நீதிபதி மாரியப்பபிள்ளை, தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் முருகேசன், தொழிலதிபர் சுமங்கலி சமுத்திரவேலு, மகாத்மாகாந்தி சேவா சங்கத்தலைவர் தவமணி, மேற்கு மாவட்ட காங்., தலைவர் போஸ்ராஜா, குருமலை, சவுந்தர்ராஜன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பண்பொழி குமாரசாமி கோயில் உதவி ஆணையாளர் கார்த்திக், செயல் அலுவலர்கள் அழகுலிங்கேஸ்வரி, ராமராஜா, சிவராமன் பிரபு மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தெப்பத்திருவிழா மண்டகப்படிதாரரான வாசுதேவநல்லூர் நாடார் உறவின்முறை சார்பில் செய்திருந்தனர்.பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.