பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
ராமேஸ்வரம்: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மழை வேண்டி, யாக பூஜை நடந்தது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க, பிரபல கோவில்களில், மழை வேண்டி யாக பூஜை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று காலை, ராமேஸ்வரம் கோவிலில் உள்ள சேதுமாதவர் தீர்த்த குளத்தில், வேத விற்பன்னர்கள், வருண ஜெபம் செய்தனர். பின், சேதுமாதவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையை அடுத்து, ருத்ர பூஜையும், யாக வேள்வி பூஜையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.