பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒ‹ரம்மன் கோவிலில், உண்டியல் திறந்து, காணிக்கைகள் எண்ணப்பட்டன. திருக்கழுக்குன்றம், சன்னிதி தெருவில், ஒ‹ரம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், பல ஆண்டுகளாக, அங்குள்ள, தி.மு.க., பிரமுகரின் வசம் இருந்தது. இதனை, கடந்த 2012ம் ஆண்டு, இந்து அறநிலையத்துறையினர் மீட்டு, பராமரித்து வருகின்றனர். கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில், உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, செயல் அலுவலர் வீருபொம்மு தலைமையில், ஆய்வாளர் அலுமேலு மற்றும் ஊழியர்கள் உண்டியலை திறந்தனர். இதில், 18, 873 ரூபாய் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.