பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை துர்க்கை அம்மன் கோவிலில், 21ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை, 8 மணிக்கு குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக துர்க்கை அம்மன் கோவிலை வந்ததடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. காலை, 10 மணிக்கு திருவீதி உலா நடந்தது. இதில் துர்க்கை அம்மன் தங்க கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (ஜூன்.28) முதல் வரும், 3ம் தேதி வரை காலை, 7 மணி முதல், இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. 4ம் தேதி காலை, 10 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு பூர்த்தி ஹோமும், பிற்பகல், காசி, கங்கை தீர்த்தத்தால் மஹா அபிஷேகம் நடக்கிறது. வரும், 5ம் தேதி காலை, 6 மணி முதல், 7 மணிக்குள், நடக்கும் தேர்திருவிழாவில், பெண்கள் மட்டும் கலந்து கொண்டு தேரை நிலை பெயர்க்கும், நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மனின் திருவீதி உலா நடக்கிறது. வரும், 6ம் தேதி இரவு, 7 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.