பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த, காவிரி தென்கரையில் வீற்றிருப்பது செம்பொற்சோதீஸ்வரர் கோவிலாகும். இதன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த, 21ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, 24ம் தேதி முதலாம் காலயாக பூஜை, மகாதீபார்தனை நடந்தது. 25ம் தேதி இரண்டாம் கால யாகபூஜையில், மந்திர புஷ்பம், வேதபாராயணம் நடந்தது. விழாவின முக்கிய நிகழ்ச்சியான மகாகும்பாபிஷேகம், காலை, 9.30 மணிக்கு மேல் மூலவர் செம்பொற்சோதீஸ்வரர் ராஜகணபதி, தட்சிணாமூர்த்தி, பாணீகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சிவாசாரியார்கள் கருப்பத்தூர் கணபதி ராமசுப்ரமணியன், செங்கோட்டுவேல் ஆகியோர் நடத்திவைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனிவாசன், பரம்பரை அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், திருப்பணிக் குழுதலைவர் கிருஷ்ணமாச்சாரி உட்பட பலர் செய்திருந்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகனை லாலாபேட்டை போலீஸார் மேற்கொண்டனர்.