திண்டிவனம்: மழை பெய்ய வேண்டி திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் வருண ஜபம் நடந்தது. தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி வருண ஜபம் மற்றும் யாகம் நடத்தப்பட்டது. திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில், ராதா குருக்கள் தலைமையில் வருண ஜபம் நடந்தது. பாலாஜி குருக்கள், மணிகண்டன் சாஸ்திரி, அரிஹரன் சாஸ்திரிகள் கலந்து கொண்டு, யாக குண்டம் வைத்து, 1008 வருண ஜபமும், 108 வருண காயத்ரியும் பாராயணம் வாசித்தனர். புனித கலச நீரால் மூலவர் திந்திரிணீஸ்வரருக்கு, ருத்ர பாராயணத்துடன் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அறநிலையத்துறை அலுவலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.