பதிவு செய்த நாள்
29
ஜூன்
2013
10:06
பழநி: பழநி கோயில் உண்டியலில், 16 நாட்களில் ஒரு கோடியே 11 லட்ச ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில், கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ஒருகோடியே 11 லட்சத்து 84 ஆயிரத்து 845 ரூபாய், தங்கம் 654 கிராம், வெள்ளி 3 ஆயிரம் கிராம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கரன்சி 407 கிடைத்துள்ளது. இவை தவிர தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன பல்வேறு உருவங்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இவை, 16 நாட்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டவை. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணைக்கமிஷனர் (பொ) ராஜ மாணிக்கம், திருப்பரங்குன்றம் துணை ஆணையர் பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.