பதிவு செய்த நாள்
29
ஜூன்
2013
10:06
புதுச்சேரி:வேதாஸ்ரம குருகுலத்தில், பிரளய காள ருத்ர கோபசாந்தி மகாயாகம் ஜூன் 30 ம் தேதி நடக்கிறது.இது குறித்து வேதாஸ்ரம குருகுலம் ராஜா சாஸ்திரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:கருவடிக்குப்பம் இடையன்சாவடி ரோடு வேதாஸ்ரம குருகுலத்தில், ஜூன் 30 ம் தேதி மாலை 3:00 மணி முதல் 6:00 வரை "பிரளய காள ருத்ர கோபசாந்தி மகா யாகம் நடக்கிறது. உத்திரகண்ட் மாநில கேதார்நாத் ஜோதிர்லிங்க யாத்திரைக்கு சென்று, சிவபாதம் அடைந்தவர்கள் சாந்தி அடையவும், சிவபெருமான் கோபம் தணிந்து, மீண்டும் கேதார்நாத் யாத்திரை தொடங்கவும், இயற்கை கோர தாண்டவத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் சரி செய்திடவும் யாகம் நடத்தப்படுகிறது. கணபதி ஹோமம், சாந்தி ஹோமம், திசா ஹோமம், ருத்ர ஹோமம், சிவபுராணப் பாராயணம், யாத்திரையில் உயிர்நீத்த சிவனடியார்களுக்கு கோதானம், மோக்ஷ தீபம், குருகுல மாணவர்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்படுகிறது.யாத்திரையில் இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், மீண்டும் யாத்திரை தொடங்கவும், நம்மால் இயன்ற பண உதவியை வசூலித்து, புதுச்சேரி அரசு மூலம் அளிக்கவும், அனைவரும் வழிபாடு நடத்தி இறையருள் பெறுவோம். மேலும் விபரங்களுக்கு 9842329770, 9842327791 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.