பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
11:07
ஆழ்வார்குறிச்சி: கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் வரும் 15ம்தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கடையம் வடக்கு ரதவீதியில் அமைந்துள்ளது முப்புடாதி அம்மன் கோயில். இங்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்திற்காக முப்புடாதி அம்மன் பக்தர் பேரவை மற்றும் பொதுமக்கள் சார்பில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 11ம்தேதி காலை 5.30 மணியளவில் அனுக்ஞை, மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜையும், கோ பூஜை, கஜ பூஜையுடன் விழா துவங்குகிறது. காலை 9 மணிக்கு நவக்கிரக ஹோமம், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீப ஆராதனை ஆகியன நடக்கிறது. 12ம்தேதி காலை 8 மணிக்கு துர்க்கா ஹோமம், கன்னிகா பூஜை, ஸ்வாஸினி பூஜை, தம்பதி பூஜை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ம்ருத்ஸங்கிரஹனம், அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம், யஜமான வர்ணம், ஆச்சார்ய வர்ணம் நடக்கிறது. 13ம்தேதி காலை 8 மணிக்கு பாபநாசத்திலிருந்து தாமிரபரணி தீர்த்தம் 108 கலசங்களில் எடுத்து வரப்பட்டு ஊர்வலமாக எடத்து வரப்படுகிறது. பின்னர் அம்பாள் ஜலாதி வாஸம், புஷ்பாதி வாஸம் ஆகிய வைபவங்களும், மாலை 5 மணியளவில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, திருமுறை பாராயணம் நடக்கிறது.14ம்தேதி காலை 8 மணியளவில் விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, 9 மணியளவில் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக நாளான வரும் 15ம்தேதி காலை 7 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாஹுதி, 9 மணிக்கு யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் நடக்கிறது. 9.15லிருந்து 10மணிக்குள் சாலக்கோபுரம், விநாயகர், முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை நடகிறது. தொடர்ந்து காலை 11 மணியளவில் மகா அபிஷேகம், 11.30 மணிக்கு அன்னதானம் இரவு 7 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தல் இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன், தக்கார் வள்ளியம்மாள் ஆகியோர் மேற்பார்வையில் முப்புடாதி அம்மன் பக்தர் பேரவை மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.