ரூ.3 கோடியில் பெருமாள் கோவில்: ஓமந்தூரில் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2013 11:07
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் கிராமத்தில் பழமையான பெருமாள் கோவிலை 3 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ் சாலையில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டநாராயண பெருமாள் கோவில் சேதமடைந்துள்ளது. கோவிலை புதிதாக கட்ட கிராம மக்களின் கோரிக்கையை 84 லட்சம் ரூபாய் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 3 கோடி ரூபாய் செலவில் கட்ட மதிப்பீடு தயாரித்து, பரம்பரை தர்மகர்த்தா பத்ரி நாராயணன் தலைமையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட நாராயணா பாத யாத்திரை பக்த சமாஜம் ஏற்பாடு செய்துள்ளது. கட்டுமான பணிக்கு டெண்டர் விட்டு இடித்து, மூலவர் சிலை, துணியால் மூடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிக்கு நன்கொடை வழங்குபவர்கள், வழங்கலாம் என கோவில் பரம்பரை அறங்காவலர் பத்ரிநாராயணன் கூறினார்.