பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசித்த போது, பட்ட துன்பத்திற்கு அளவே இல்லை. ஒருசமயம் காட்டில் அம்பிகையின் உக்கிர வடிவமான பிரத்யங்கிரா தேவி சிலையை அவர்கள் கண்டனர். தேவி தரிசனம் கிடைத்ததும், தங்களின் துன்பம் அனைத்தும் விரைவில் தீரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டானது. வழிபாட்டுக்காக காட்டுப்பூக்களைத் தேடி அலைந்தனர். ஏதும் கிடைக்காததால், அங்கிருந்த ஆலமர இலைகளைப் பறித்து பூஜித்தனர். கருணையுடன் தேவியும், அவர்கள் முன் தோன்றி கவுரவர்களை அழிக்கும் பலத்தை அருள் செய்தாள். பஞ்சபாண்டவர் ஐவரும் வழிபட்டதால் அந்த இடம், ஐவர் பாடி ஆனது. இதுவே தற்போது அய்யாவாடி ஆகிவிட்டது. அமாவாசையன்று பிரத்யங்கிரா வழிபாடு செய்தவர்கள் எதிரிபயம் நீங்கி தைரியம் பெறுவர்.