கிஷ்கிந்தையில் இருந்து கிளம்பிய ராமர், நடந்தே சேதுக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தார். வரும் வழியில் ராமநாதபுரம் அருகில் உள்ள உப்பூர் விநாயகரை வழிபட்டு, ராவணனை வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டார். தாய்மாமனாகிய ராமர்(மகாவிஷ்ணு) மனைவியைப் பிரிந்து வருந்துவதை எண்ணி விநாயகரும், கூரை கூட இல்லாமல் வெயில் காய்ந்த படி எளியவராக இருக்கிறார். இவருக்கு வெயிலுகந்த விநாயகர் என்று பெயர். இவர் காசி டுண்டி கணபதி க்கு ஈடானவர். வடமொழியில் டுண்டி என்பதற்கு தொந்தி என பொருள். இதனை வெளிப்படுத்தும் விதத்தில் உப்பூருக்கு அருகில் தொண்டி என்னும் பகுதியும் உள்ளது. ஆதிசங்கரர் சேதுக்கரைக்கு வந்தபோது, உப்பூர் விநாயகரை வணங்கி அவர் மீது கணேச பஞ்சரத்தினம் பாடினார்.