பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
சின்னமனூர்: சின்னமனூரில் உள்ள விருதுநகர் இந்துநாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் மஹா கணபதி ஹோமம், பூர்வாங்க பூஜைகள், இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று கும்பாபிஷேக விழா திருப்பணிக்குழு தலைவர் துர்கா வஜ்ரவேல், உறவின் முறைத் தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. மூலாலயம், பரிவார மூர்த்திகளுக்கும் விமானத்திற்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை ராஜாபட்டர், ஸ்தல குருக்கள் கணேசபட்டர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். திருப்பணிக்குழுத் தலைவர் துர்கா வஜ்ரவேல், உறவின்முறைத் தலைவர் மகேந்திரன், உப தலைவர் பொன்ராஜா, பொருளாளர் மோகன் மற்றும் செயலாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், திருப்பணிக்குழுவினர், வாலிபர் சங்க தலைவர் சரவணன், உபதலைவர் பழனிவேல் முருகன், பொருளாளர் சிவக்குமார் மற்றும் காமராஜர் நற்பணிமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் சுரேஷ், துணைத் தலைவர் வேதநாயம், காயத்ரி மெட்ரிக்பள்ளி தாளாளர் விரியன்சுவாமி, பள்ளிக்குழு துணைத் தலைவர் வாசிமலை, நகர்நல கமிட்டி தலைவர் ராமசுப்ரமணியன், கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் ஆர்.எஸ். முருகேசன், வெள்ளைச்சாமி, ஜெயகோபால், ஆர். முருகேசன், சிவமணி, மாரிமுத்து. தி.மு.க., நகர செயலாளர் மயில்வாகணன், முன்னாள் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் சன்னாசி, ஹோட்டல் சங்க தலைவர் மனோகரன், மேலப்பேட்டை நாடார் உறவின்முறையினர், திருமங்கலம் நாடார் உறவின் முறையினர், கள்ளர் பேரவையினர், சேர்வை சாவடி நிர்வாகிகள், கோயில் ஸ்தபதி வெங்கடேசன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.