பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
திருப்போரூர்: தண்டலம் செல்லியம்மன் கோவிலில், இன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. தண்டலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில், கடந்த 3ம் தேதி, காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 7ம் தேதி, அறிவிப்பு நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு, ஊரணி குளத்தின் அருகில், அண்ணமார் பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள், பூசாரி முன்னிலையில் வழிபாடு நடத்தினர். பூ மாலை அலங்காரத்துடன் ஊர்வலம் வந்து, அம்மன் பாதத்தில் ஆயுதங்களை வைத்தனர். செல்லியம்மன், விசேஷ அலங்காரத்தில் அருள் பாலித்தார். அதை தொடர்ந்து, இன்றும், நாளையும் பிரதான தேர் திருவிழா நடைபெற உள்ளது.