கும்மிடிப்பூண்டி: குமாரநாயக்கன்பேட்டை வெக்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நாளை துவங்குகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த, ஈகுவார்பாளையம் அருகே, குமாரநாயக்கன்பேட்டை கிராமத்தில் உள்ளது. வெக்காளியம்மன் கோவில். பிரமாண்டமாக வீற்றிருக்கும் வெக்காளி அம்மனை தரிசிக்க, கும்மிடிப்பூண்டியை சுற்றியுள்ளவர் மட்டுமின்றி, சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக, ஆண்டு தோறும் தீமிதி உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டின் தீமிதி திருவிழா நாளை முதல் துவங்குகிறது.
தேதி நேரம் நிகழ்ச்சி 12.07.2013 காலை காப்பு கட்டுதல் 13.07.2013 மாலை கணபதி ஹோமம் 14.07.2013 மாலை தீமிதி திருவிழா