Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: நிறத்திற்காக ... புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் புடவை ரூ.68 ஆயிரத்துக்கு ஏலம்! புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் தீ மிதிப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
10:07

திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருத்தணி அடுத்த, கீழாந்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு  மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பெண்கள் கூழ்வார்த்து, பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். மாலை, 6:15 மணிக்கு கோவில் எதிரில் உள்ள அக்னிகுண்டத்தில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து, மஞ்சள் ஆடை அணிந்து தீ மிதித்தனர். பின்பு வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. விழாவில், கீழாந்தூர், டி.புதூர், வளர்புரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து, அம்மனை வழிபட்டனர். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா சபாபதி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar