Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரம்பாக்கம் திரவுபதி அம்மன் ... விஜய விநாயகர் கோவிலில் ராஜகோபுர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2013
11:07

தர்மபுரி: தர்மபுரி, ஏ.எஸ்.டி.சி., நகர் சித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி, குமாரசாமிபேட்டை சக்தி விநாயகர் கோவிலிருந்து கங்கை தீர்த்த ஊர்வலமும், விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை, லட்சுமி பூஜை, முதல் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹூதியும், கலச புறப்பாடும், சித்தி விநாயகர் மற்றும் பரிவாரி மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். தர்மபுரி பாரதிபுரம் விநாயகர் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து குத்து விளக்கு பூஜையும், விநாயகர், ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய ஸ்வாமி மூலவர்களுக்கும் கோபுர பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.மாலை, 7 மணிக்கு ஸ்வாமி திருக்கல்யாணம், திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் கிருபானந்தம், பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் நல்லதம்பி மற்றம் செங்குந்த சிவனேய செல்வர்கள் செய்திருந்தனர். தர்மபுரி டவுன் தங்கவேலு தெரு, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், 14ம் தேதி காலை, 9 மணிக்கு முதல்கால யாக பூஜையும், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், மாலை, 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், யாத்ரா தானமும், சண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், இரவு, 11 மணிக்கு ஸ்வாமிக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதலும், கோபுர கலசம் வைத்தலும் நடந்தது.நேற்று காலை, 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜையும், காலை, 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜூலை 16) முதல், 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar