பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
சிறுவாபுரி: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 21ம் தேதி, வள்ளி கல்யாண லட்சார்ச்சனை நடக்கிறது. பொன்னேரி வட்டம், சின்னம்பேடு கிராமத்தில் உள்ளது, சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில், பக்தர்கள் வழிபாட்டு குழுக்களை அமைத்து, அபிஷேக ஆராதனை நடத்தி வருகின்றனர். இக் குழுக்களில் ஒன்றான, மயிலை சிறுவாபுரி பிரார்த்தனைக் குழுவின், 20ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, வரும் 21ம் தேதி வள்ளி கல்யாணம் நடக்கிறது. அன்றைய தினம், காலை, 7:30 மணிக்கு அபிஷேகமும், காலை, 9:00 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.இதையொட்டி, சிறுவாபுரிக்கு மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, காலை 5:30 மணிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, தக்கார் கவெனிதா, செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் செய்துள்ளனர்.