முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் செல்வியம்மன் கோயில் 37வது ஆண்டு, பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், மு.தூரி, கீழச்சாக்குளம், இளஞ்செம்பூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சாந்தா, செல்வராணி செய்திருந்தனர்.