பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
தொடுகாடு: தொடுகாடு நகைமுகைவல்லி உடனுறை பீமேஸ்வரர் கோவில் மற்றும் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. கடம்பத்தூர் ஒன்றியத்தில், பீமேஸ்வரர் கோவில் மற்றும் மகா கணபதி கோவில் அமைந்துள்ளன. இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம் இன்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்கு நடைபெறும். முன்னதாக, காலை, 7:00 மணி முதல் 9:00 மணி வரை மங்கள இசையுடன் கிராம தேவதை வழிபாடு, கணபதி பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி போன்ற பூஜைகள் நடைபெறும். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.