பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
விழுப்புரம்: விழுப்புரம் கன்னியாக்குளக்கரையில் உள்ள கன்னியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா இன்று நடக்கிறது.விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி காலை 9.15 மணிக்கு பந்தல் கால் நடுதல், கணபதி ஹோமமும், 12ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பின், 17ம் தேதி மாலை 6 மணிக்கு முலைப்பாரிகை இடுதல், அம்மன் வீதியுலாவும், 18ம் தேதி மகளிர் குழுவினரால் தாய்வீட்டு சீர்வரிசையுடன் அக்னி கரகம், அக்னி சட்டியுடன் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று காலை 7 மணிக்கு வீரவாழியம்மன் கோவிலிலிருந்து பால்குடம் ஊர்வலமும், மாலை 4 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.