பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில், 38ம் ஆண்டு கபிலர் இன்று துவங்குகிறது. திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில், 38ம் ஆண்டு கபிலர் விழா, இன்று காலை 10.30 மணிக்கு, சுப்ரமணிய மகால் திருமண மண்டபத்தில், ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையுடன் துவங்குகிறது. சிவசுப்பிரமணியன் தலைமையில், 11.00 மணிக்கு "கபிலரின் நெடும் பயணங்கள் என்ற தலைப்பில் புரிசை நடராசன், இலங்கை ஜெயராஜ், மு.சிவச்சந்திரன் இலக்கிய பேருரை ஆற்றுகின்றனர். மாலை 5.00 மணிக்கு சற்குருநாதன் குழுவினரின் இசை மாலையை, எம்.எல்.ஏ., வெங்கடேசன் துவக்கி வைக்கிறார். இலங்கை ஜெயராஜ் தலைமையில், "வள்ளுவர் அறத்துப்பாலில் மிகுதியும் வலியுறுத்துவது "இல்லறவியலே, "துறவியலே, "ஊழியலே என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடக்கிறது. நாளை (20ம் தேதி) காலை 10.30 மணிக்கு, "சங்க கால மகளிர் என்ற தலைப்பில் நடக்கும், இலக்கிய விழாவிற்கு விசாலாட்சி சுப்ரமணியன் தலைமை தாங்குகிறார். மாலை 5.00 மணிக்கு, விருது பெரும் அறிஞர்கள், கபிலர் குன்றில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்படுகின்றனர். ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் தேவிமுருகன் துவக்கி வைக்கிறார். பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார். கபிலர் விருது வழங்கும் விழாவிற்கு, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் தலைமை தாங்கி, முதுமுனைவர் தமிழண்ணலுக்கு, கபிலர் விருது மற்றும் கபிலவாணர் பட்டம் வழங்குகிறார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் முரளிக்கு, கலைப்புரவலர் பட்டமும், கவிஞர் ஞா.மாணிக்கவாசகருக்கு எழுத்துச்சிற்பி பட்டம் வழங்கப்படுகிறதுடாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் குழுவின் இசை விழா நடக்கிறது.