குஜிலியம்பாறை: ஆர்.வெள்ளோட்டில், புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோயிலில், கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று 48 வது நாள் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. கிராம முக்கியஸ்தர் குமரேசன் தலைமை வகித்தார். தாந்தோன்றிமலை கோயில் குருக்கள் ரங்கராஜ் தலைமையில் பூஜை நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் பாலகுரு, சீனிவாசன், பழனிச்சாமி, கெங்கம நாயக்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.