பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
திருவேங்கடம்: முகலிங்கபுரம் சடச்சியம்மன், காந்தாரி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா முகிங்கபுரம் தேவேந்திரகுலசமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சடச்சியம்மன், காந்தாரியம்மன் கோயிலில் நூதனவிக்கிரக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலை பூஜைகள் துவங்கி தொடர்ந்து கணபதி, லட்சுமி, சுதர்சனநவக்கிரக ஹோமங்கள், வாய்துசாந்தி, பிரவேசபலி, புண்ணியநதிகள் பூஜை, கும்பஅலங்காரம், பூதசுத்தி, கடாசர்ஷணம், கடம்யாகசாலை பிரவேசம், 1வது காலயசகசாலை பூஜை நடந்தது. நள்ளிரவில் யந்திரஸ்தாபனம், புதிய வீடு பிரதிஷ்டை, அஷ்படந்தனமருந்து சாற்றுதல் நடந்தது. இரண்டாம் நாள் அதிகாலை 2வது யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி காப்புகட்டுதல், நாடிசந்தானம், திருவியகுதி, மகாபூர்ணாகுதி, கோமாதாபூஜை, யந்திரதானம், கடம் எழுந்தருளல் நடந்தது. பின்பு கோபுரம், சடச்சியம்மன், காந்தாரியம்மன், அஷ்டபந்தனமகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்காரதீபாராதனை பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேகத்தை சங்கரன்கோவில் சங்கரசுப்பிரமணியபட்டர் நடத்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிகமிட்டியார் மற்றும் முகலிங்கபுரம் பொதுமக்கள், தேவேந்திரகுல சமுதாயத்தினர் செய்திருந்தனர்.