ஸ்ரீவில்லிபுத்தூர் தங்க விமான பணிக்கு ஒரு கிலோ தங்கம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2013 10:07
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆண்டாள் கோயில் தங்க விமான பணிக்கு, ஒரு கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கப்பட்டது. ஆண்டாள் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், ஆண்டாள் கோயில் தங்க விமான பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்கள், காணிக்கையõக தங்கத்தை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். சிவகாசியை சொந்த ஊராக கொண்ட, பிரிட்டன் "பப்புவா நியூஜினியா தீவின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், ஒரு கிலோ தங்கத்தினை, விமான பணிக்காக, தக்கார் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.