திருக்கனூர்: கூனிச்சம்பட்டு செங்கேணியம்மனுக்கு 501 பால்குட அபிஷேகம் நடந்தது. திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு செங்கேணியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் இருந்து சக்தி கரகம் மற்றும் 501 பால் குடம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இரவு சாமி வீதியுலா நடந்தது.