கிருமாம்பாக்கம்: கொருக்கன்மேடு புனித அன்னம்மாள் ஆலய தேர்பவனி வரும் 28ம் தேதி நடக்கிறது. தவளக்குப்பம் அடுத்த கொருக்கன்மேடு புனித அன்னம்மாள் ஆலய, 90ம் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தமிழக ஆயர் பேரவை செயலாளர் ஜோசப்ராஜ் கொடியேற்றினார். நாள்தோறும் தேர்பவனி, நற்கருணை ஆசீர்வாத கூட்டங்கள் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி வரும் 28ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6:00மணிக்கு புனித அன்னம்மாள் பெருவிழா திருப்பலி, தேர்பவனி நடக்கிறது. 29ம் தேதி திருப்பலி கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.