காரியாபட்டி: மல்லாங்கிணர் நாகம்மாள் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் நடந்தன. அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருவிளக்கு பூஜையும் நடந்தது. அம்மனுக்கு கரகம் எடுத்து, நேர்த்திகடனுக்கு மாவிளக்கும் எடுத்தனர். அன்னதானம், கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.