மதுரை: மதுரை ராமானுஜர்புரம் பத்ரகாளி அம்மன் கோயில், கடம்பவன ஈஸ்வரர் கோயில் ஆடி உற்சவ விழா நடந்தது. கவுன்சிலர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். நிர்வாகி துரைப்பாண்டி, மஸ்தூர் யூனியன் குட்செட் சங்க தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாக செயலாளர் திராவிடமாரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அசோக்குமார் துவக்கி வைத்தார்.மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. நிர்வாகிகள் ராஜ், அன்புராஜ் பங்கேற்றனர்.