திருப்பூர் அருகில் அலகுமலை அடிவாரத்திலுள்ள வானவன் சேரியில் ஜேஸ்டாதேவி சிலை உள்ளது. இந்த தேவிக்கு காகம் கொடியாகவும், கழுதை வாகனமாகவும், துடைப்பம் ஆயுதமாகவும் உள்ளன. மன்னர்கள் போருக்குப் புறப்படும்போது இந்த தேவியை வணங்கிவிட்டுச் செல்வார்களாம் எதிரி நாட்டுமன்னனுக்கு சோம்பலைத் தந்து அதன்மூலம் அவனுக்குத் தோல்வியையும், தங்களுக்கு வெற்றியையும் தருமாறு வேண்டிச் செல்வார்களாம்!