பதிவு செய்த நாள்
26
ஜூலை
2013
10:07
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா சர்ச் திருவிழா இன்று துவங்குகிறது. ஆக.,5 ல் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. இந்த சர்ச்சின், 431ம் ஆண்டு திருவிழா, பேராலயம் கட்டடப்பட்டதன், 300வது ஆண்டு நிறைவு விழா, இன்று காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, நேற்றுமாலை, கொடிப்பவனி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நாட்களில், தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கின்றன. முக்கிய நிகழ்ச்சியான, தங்கத்தேரோட்டம், 11ம் நாளான, ஆக.,5 ல் காலை நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், நிர்வாகிகள் செய்துள்ளனர்.