ரியோ டிஜெனிரோ: சர்வதேச இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில்,போப் பிரான்சிஸ் பங்கேற்ற சிறப்புப் பிரார்த்தனையில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று சாதனை படைத்தனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் ஆவார்.இவர் தனது சொந்த நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவின் கோபகபனா கடற்கரையில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்றார். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டிருந்தனர். பிரார்த்தனையின்போது, போப் கூறுகையில், ""ஆர்வம், புத்தாக்கம் மற்றும் சந்தோஷம் உள்ளிட்ட இளைஞர்களின் குணநலன்கள் தேவாலயங்களுக்கு தேவைப்படுகிறது என்றார்.