திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 41 ஆண்டுகளாக இருந்த அவ்வை யானை, உடல்நலக்கோளாறால், கடந்த ஆண்டு ஜூலை 28ல் இறந்தது. மலைக்குப் பின்புறம் தென்பரங்குன்றத்திலுள்ள பசு மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஓராண்டு நிறைவடைந்தை முன்னிட்டு, நேற்று அவ்வைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவாச்சார்யார் செல்லப்பா தலைமையில் பூஜை நடந்தது. பிடித்த உணவு படைக்கப்பட்டது. பாகன்கள் கணபதி சுப்பிரமணியம், கனகவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.