பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
10:07
ஆண்கள் மத்தியில் நடமாடும் விஷயத்தில் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ""நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் மற்றும் நம்பிக்கையாளரின் மனைவிகள் ஆகியோரிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய துப்பட்டிகளின் முந்தானையை தங்களின் மீது தொங்க விட்டுக் கொள்ளட்டும். அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான், என்கிறது குர்ஆன். ஒரு பெண் அலங்காரம் செய்து கொண்டால், தன் கணவர், திருமண உறவு அல்லாத உறவினர்கள், வேலையாட்கள், சிறுவர்கள், பிற பெண்கள் மத்தியில் நடமாடலாம். மற்ற ஆண்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முன்பு பர்தா அணிந்தே வரவேண்டும். ஆண்களிடமிருந்து ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்றவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் உடலமைப்பை ஒட்டியும், ஒழுக்கக் கேடில்லாத சமுதாயத்தை உருவாக்கவும் இது உதவும் பெண்கள் இந்தக் கருத்து குறித்து, நோன்பு காலத்தில் சிந்தனை செய்யட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26.