பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
11:07
கடம்பத்தூர்: கூவம் திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நாளை (31ம் தேதி) துவங்குகிறது. கடம்பத்தூர் ஒன்றியம், கூவம் ஊராட்சியில், திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், தேவாரம் பாடல் பெற்ற, 32 திருத்தலங்களுள், 14வது திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டு, நாளை (31ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, இன்று மாலை, 7:30 மணிக்கு பூர்வாகங்கம் விநாயகர் உற்சவம் நடைபெறும். தொடர்ந்து, 11 நாட்கள் விழா நடைபெறும். தினமும், கோவிலில் உற்சவருக்கு காலை, மாலை இருவேளைகளும் அபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெறும்.
நாள் நேரம் நிகழ்ச்சி
30.07.13 இரவு பூர்வாங்க விநாயகர் உற்சவம்
31.07.13 காலை கொடியேற்றம்
இரவு சூர்ய பிரபை, சந்திர பிரபை
01.08.13 காலை பவழக்கால் சப்பரம்
இரவு பூதவாகனம்
02.08.13 இரவு மயில் வாகனம்
03.08.13 இரவு நாக வாகனம்
04.08.13 இரவு ரிஷப வாகனம்
05.08.13 இரவு யானை வாகனம்
06.08.13 காலை ரத உற்சவம்
இரவு ராவண வாகனம்
07.08.13 இரவு குதிரை வாகனம்
08.08.13 இரவு காமதேனு வாகனம்
09.08.13 இரவு தீர்த்தவாரி சிம்ம வாகனம்
10.08.13 மாலை ரிஷப வாகனம்
இரவு திருக்கல்யாணம்