உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவி லில் ஆடி கிருத்திகை பெருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு வேடுசெட்டி குளக்கரையில் இருந்து தேரோடும் வீதி வழியாக காவடி, தேர் செடல் மற்றும் 1008 பால் குடம் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், துணை தலைவர் தாண்டவராயன் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.