அவிநாசி:அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் பெரிய கருப்பராயன் கோவில் திருவிழாவில், 2,000 ஆடுகள் பலியிடப்பட்டன.கருப்பராயன் அழைப்பு, படைக் கலம் புறப்படுதல், அம்மன் பூஜை மற்றும் மாவிளக்கு எடுத்தல் ஆகியன நடந்தன. குதிரை வாகன பூஜைக்கு பின், 2,000க்கும் அதிகமான ஆடுகள் பலியிடப்பட்டன. விழாவையொட்டி, வாண வேடிக்கை நடந்தது. ராயர்பாளையம், போத்தம்பாளையத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.