டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணியஸ்தலமான கேதார்நாத் கோவில் வரும் செப்., 11-ம் தேதி பூஜைகள் நடத்தப்பட உள்ளது. கடந்த மாதம் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக புகழ்பெற்ற கோவிலகள் உபட்பட குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மிகவும் கோரமாக நிகழ்ந்த சம்பவத்தில் பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மாநில அரசு போர் கால அடிப்படையில் சீர் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் விரைவில் புன்னிஸ்தலங்கள் சீரமைக்கப்பட்டு பொதுமக்களி்ன் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என முதல்வர் பகுகுனா தெரிவித்திரு்நதார். இந்நிலையில் முதல்வர் விஜய் பகுகுனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டன்ர். கூட்டத்தி்ல் வரும் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு கேதார் நாத் கோவிலில் பூஜையுடன் துவக்குவது என முடிவு செய்யப்பட்டது.