பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
வடமதுரை : வடமதுரை அருகே, கோவில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி பெற்று, நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, ஜி.குரும்பப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில், ஆடித்திருவிழா நடந்தது. விரதமிருந்த பக்தர்கள், நேற்று காலை, கோவில் முன் வட்டமாக அமர்ந்தனர். ஆணிகளால் வடிவமைக்கப்பட்ட, மரக்கட்டை காலணியை அணிந்தபடி வந்த பூசாரி, வரிசையாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார். பின், பக்தர்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டது. அதன் பின், பக்தர்கள் கோஷமிட்டபடி, கோவிலுக்குள் சென்று, அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.