காஞ்சிபுரம்:செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், திருவாதிரையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலின்உபகோவிலாக, செவிலிமேடு ராமானுஜர் கோவில் உள்ளது. ராமானுஜர் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தில், திருமஞ்சனம் மற்றும் சிறப்புஅபிஷேகம் நடைபெறும். நேற்று ஆடித் திருவாதிரையை முன்னிட்டு, காலை, 10:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை, மூலவர் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.