பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
திருத்தணி:துர்கையம்மன் கோவிலில், நேற்று ஆடி மாதம், மூன்றாம் வாரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.திருத்தணி காந்தி நகரில் அமைந்துள்ள துர்கைஅம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று மூன்றாவது ஞாயிற்று கிழமையை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு காலை, 8:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். பின்னர், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குசர்க்கரை பொங்கல், புளியோதரை வழங்கப்பட்டன.இதேபோல், அக்கைய்யா நாயுடு தெருவில் உள்ள தணிகாசலம்மன் கோவில், மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில் உட்பட திருத்தணி பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்புபூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன.