பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
ஓசூர்: ஓசூர் மாருதி நகர் முத்துமாரியம்மன் கோவில் 25ம் ஆண்டு உற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜையும், தொடர்ந்து, உற்சவ விழா பூஜைகள் நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட அண்ணா பொதுதொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாதேவா, அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாருதி நகர் ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், சேகர், கண்ணன், ரகு, நாராயணன், சதீஷ், நஞ்சப்பா, மணியரசு, ராஜா, தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.